யார் இந்த மயில்வாகனன்!

Oct 14, 2017, 06:00 AM

மீன் மகளின் மூத்த வாரிசு மேன்மைகொள் சமயப் பிதாமகன் முத்தமிழை தத்தெடுத்த வித்தகன் மூவுலகும் வணங்கும் துறவி

வெள்ளையனின் ஆதிக்கத்தில் வேரறுந்த எம்மினத்தை பள்ளிகள் கட்டி பாரில் உயர்தியவர்..

ஏட்டில் மண்டிக் கிடந்த எத்தனையோ தமிழ்நூல்கள் வீட்டில் படிக்கச் செய்த மகான்

சாதிவெறி கொண்ட சமுகத்திலே சமத்துவத்தினை ஊட்ட நீதி புகட்டிய வள்ளலார்

பத்திரிகைகள் பல நடாத்தி - கல்வி பண்பாடு மேலோங்க பாடுகள் பட்ட பேராசான்

யாழ்நூல் தனைப் படைத்து யாவர்கும் இசைவிளங்க ஆராய்ந்த ஈழத்து இசைஞானி

இயல் இசை நாடகமென எல்லாத் துறையும் விளங்க முயல்வோடு உழைத்த பண்டிதர்

பண்டிதரும் புலவரும் பாரினில் படித்தவரும் நல்லாசானும்- வாரிசாய் கொண்டிருக்க தொண்டுசெய்த விபுலாநந்தர்

நெற்களஞ்சியம் போல் தமிழ் சொற்களஞ்சியம் படைத்து தமிழை அறியவைத்த தந்தை!!