இலங்கை இறுதி யுத்தத்தில் இந்திய, அமெரிக்க கடற்படைகள் உதவின: கர்னல் ஹரிஹரன்

Oct 26, 2014, 05:09 PM

Subscribe

சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்னல். ஹரிஹரன்.

இது குறித்த தனது தீவிர கவலையை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்ததாக சென்னையில் இருந்து வெளியாகும் ''தி ஹிந்து'' பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்றவாரம் இந்தியா வந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் கவலைகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் ''தி ஹிந்து'' செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவின் கவலையின் பின்னணி குறித்து இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயரதிகாரி கர்னல் ஹரிஹரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.