"ஆங்கிலமொழி இந்திய கலாச்சாரத்தை அழிக்கிறதா?"
Share
Subscribe
ஆங்கில மொழி என்பது இந்திய கலாச்சாரத்தை அழிப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக சமஸ்கிரதம் படிப்படியாக செல்வாக்கிழந்துவிட்டதாகவும் இன்றைய நிலையில் வெறும் 14 ஆயிரம் பேர் மட்டுமே இந்தியாவில் சமஸ்கிரதம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அரசியலில் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
பாஜகவின் கொள்கை விளக்கக் குறிப்புக்களை தயாரிக்கும் பொறுப்பை ஆங்கிலம் மட்டுமே பேசத்தெரிந்தவர்களிடம் கையளித்திருக்கும் பாஜகவின் தலைவர், ஆங்கிலத்தால் இந்திய கலாச்சாரம் காணாமல் போவதாக கூறுவது அவரது இரட்டை அளவுகோலை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.
ஆனால் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துக்கள் அவர் சொன்னதற்கு மாறாக பிழையாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார் பாஜக சார்பில் பேசவல்ல நிர்மலா சீதாராமன்.
