இந்திய அரசை எதிர்த்து டெசோவின் டெல்லி ஆர்ப்பாட்டம் ஏன்?

Jul 22, 2013, 02:25 PM

Subscribe

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 8-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தலைநகர் புது தில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புது தில்லியில் திமுக நடத்தும் இந்த ஆர்பாட்டம் அரசியல் நோக்கங்களுக்கானதா என்கிற கேள்விக்கு பதிலளிக்கிறார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்.