கருப்பு ஜூலை : தீர்வில்லாமல் தொடரும் துயரம்
Share
Subscribe
இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் இன்றளவும் ஒரு கரும்புள்ளியாக கருதப்படும் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதக் கலவரங்கள் இடம்பெற்று முப்பது ஆண்டுகள் ஆனாலும், அந்த ஜூலை வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமோ, அதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வோ இன்றுவரை காணப்படவில்லை என்பது யதார்த்தமாகவுள்ளது. மிகவும் கொடூரமான வன்செயல்களுடன் இடம்பெற்ற அந்த ஜூலை மாதத் தாக்குதலில் பின்னணி, தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற அட்டூழியங்கள், இன்றுவரை மாறாமல் இருக்கும் அதன் வடுக்கள், அடுத்த என்ன என்கிற கேள்விகள் ஆகியவற்றை ஆராயும் சிறப்புப் பெட்டகத்தை இங்கே கேட்கலாம். தயாரித்து வழங்குபவர் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் மாணிக்கவாசகம்.
