பிபிசி தமிழோசை வெள்ளிக் கிழமை 26-07-13
Share
Subscribe
ஜூலை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக் கிழமை நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவின் அகதிக் கொள்கையை ஐ நா விமர்சித்துள்ளது குறித்தும், சமீபத்தில் விபத்துக்குள்ளான படகில் பயணம் செய்த இலங்கையர்கள் அளித்த செவ்விகளும் இடம்பெறும்.
பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை அரசு தனது பொறுப்பில் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த செவ்வியையும், தமிழகத்தில் இந்து அமைப்புக்களை சேர்ந்தோர் கொலை தொடர்பாக காவல் துறை அளித்த விளக்கத்தையும் நேயர்கள் கேட்கலாம்.
மலேசிய நீதிமன்றம், இந்துக் குழந்தைகளின் மத மாற்றம் தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பு குறித்தும் கல்வியைப் பரப்ப வரும் புர்க்கா அணிந்த பெண் கதாநாயகி குறித்த செய்திகளும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.
