ஆகஸ்ட்-11 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 11, 2013, 04:43 PM

இன்றைய தமிழோசையில், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியிலிருக்கும் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இன்று முஸ்லிம் மற்றும் பௌத்த தரப்பினருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த செய்திகள், பேச்சுவார்த்தைகள் முழு திருப்தி அளிப்பதாக சொல்ல முடியாது என்று கூறும் அலவி மௌலானாவின் கருத்துக்கள்.

வடமாகாண சபைத் தேர்தலுடன் மூன்றாம் கட்ட போராட்டம் ஆரம்பம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ள விபரங்கள்.

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் பாகிஸ்தான் தொடர்பான கொள்கையை நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ள தகவலும், தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவது தொடருவதில் இருந்துவரும் இழுபறிகள் பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்.