'மக்கள் முறையிட்டால் பொலிசார் மீது விசாரணை': பொலிஸ் ஆணைக்குழு

Aug 14, 2013, 06:12 PM

Subscribe

இலங்கையில் சட்டத்தை மீறிச் செயற்படுகின்ற பொலிசாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வராத காரணத்தினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிசார் சட்டப்படியான தமது கடமைகளை செய்யத் தவறினாலோ அல்லது சட்டத்தை மீறிச் செயற்பட்டாலோ அதுபற்றிய முறைப்பாடுகளை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தமது பிராந்திய அலுவலகங்களில் மக்கள் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது மாகாண பணிப்பாளர் அலுவலகங்களூடாகவோ அல்லது கொழும்பிலுள்ள தமது தலைமையகத்தினூடாகவோ முறைப்பாடுகளை பதிவுசெய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.