செப்டம்பர் 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 08, 2013, 04:22 PM

Subscribe

இன்றைய பிபிசி தமிழோசையில் சிரிய விவகாரத்தில் அமெரிக்க நிலைப்பாட்டுடன் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் உடன்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையின் மூன்று மாகாண சபைகளுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிக்கும் சார்க் நாடுகளின் குழுவுக்கு இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபலாஸ்வாமி தலைவராகச் செல்வது குறித்த செய்திகள்;

தமிழ்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையானது விடுதலைப்புலிகளினால் முடியாமல் போன தனித்தமிழீழத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கை என்று தென்னிலங்கை கட்சிகள் குற்றம்சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

2020 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு டோக்யோ நகருக்கு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு தொடரும் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள்;

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள் தொடரின் நான்காவது பகுதியில் பர்மாவின் நகரங்களில் வாழும் தமிழர் நிலை குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.