செப்டம்பர் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (14-09-2013) பிபிசி தமிழோசையில், சிரியாவின் ரசாயன ஆயுதங்களை மிக விரைவில் அழிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் தமிழருக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனையைப் போன்றது; இதில் அண்டைவீட்டுக்காரரான தமிழக அரசியல்வாதிகள் விவாகரத்துத் தான் தீர்வென்று கூறக்கூடாது என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளார் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் பிபிசி தமிழோசைக்கு சீமான் அளித்த செவ்வி;
இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அப்பகுதிக்கான உதவிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் அதிகமாகச் செய்வேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவதாக எழுந்துள்ள கவலைகள் தொடர்பான பெட்டகம்;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவை இடம்பெறுகின்றன
