அக்டோபர் 31 தமிழோசை நிகழ்ச்சிகள்

Oct 31, 2013, 04:26 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

• இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வது குறித்து நேற்றிரவு நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதா என்பது குறித்த செய்திக்குறிப்பு,

• இந்தியா இந்த உச்சிமாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று வரும் அழுத்தங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவிக்கும் கருத்து,

• திமுக தலைவர் கருணாநிதி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வதாக வரும் செய்திகள் பற்றி தெரிவித்த கருத்துக்கள்,

• இலங்கையில் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடற்படை தளபதி நியமனம் செய்யப்பட்டமை குறித்த செய்தி,

• இலங்கை கிழக்கு மாகாணத்தில் நிதி ஒதுக்கீடுகள் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய செய்தி குறிப்பு ஆகியவற்றைக் கேட்கலாம்.