நவம்பர் 3 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர் 3, 2013) தமிழோசையில்
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா தொடர்பான காணொளி குறித்து சுயாதீன விசாரணை கோரும் ஈபிடிபி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வி;
கிளிநொச்சி பகுதியில் சாலைகளில் நிலவும் மின்துண்டிப்புக்கு காரணம் என்ன என்பதை ஆராயும் செய்தித்தொகுப்பு;
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வெளியேறுவதற்காக அந்நாட்டு அரசு கொடுத்திருக்கும் காலக்கெடு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அங்கிந்து சுமார் 10,000 பேர் இலங்கை திரும்பியிருப்பது குறித்த செய்திகள்;
பிரிட்டனில் விசா விதிமுறைகளை அதிகளவில் மீறும் அபாயமுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வருவதாக இருந்தால் அவர்கள் மூவாயிரம் ஸ்டெர்லிங் பிரிட்டிஷ் பவுண்ட் வைப்புத்தொகை செலுத்தவேண்டும் என்கிற திட்டத்தை கைவிடவுள்ளாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
நிறைவாக இந்தியா நாளை மறுநாள் விண்ணில் ஏவவிருக்கும் மங்கள்யாண் விண்கலம் குறித்த பெட்டகத்தின் இறுதிப்பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
