நவம்பர் 8 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர்.8, 2013) பிபிசி தமிழோசையில்,
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசு முறையான விசாரணையை மேற்கொள்ளாதநிலையில் அது தொடர்பான சர்வதேச விசாரணையை வலியுறுத்தப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் இந்த ஆண்டுகூட தமிழர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறும் புகார்கள் குறித்த செய்தி தொகுப்பு;
இலங்கையின் வடபகுதியின் தற்போதைய நிலவரங்களை நேரில் பார்த்து அறியும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்த பகுதிகளுக்கு சென்றிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் தென் பகுதி மீனவர்கள் அந்நாட்டின் வடகடலில் மீன்பிடிப்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் நடத்திய ஆர்பாட்டம் குறித்த செய்திகள்;
கடந்த இரண்டுவாரகாலமாக சர்ச்சையை உருவாக்கிவந்த இலங்கையின் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மேயர் பதவியிலிருந்து மீராசாகிபு சிராஸ் விலகியிருப்பது குறித்த செய்தி;
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் தொடர்பாக கொண்டுவரப்பட்ட நிதாகத் சட்டத்தால் பாதிக்கப்படும் இந்திய தொழிலாளர்களின் நிலைமையை ஆராயும் பெட்டகத்தின் இறுதிப்பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
