நவம்பர் 9 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 09, 2013, 05:57 PM

Subscribe

இன்றைய (நவம்பர் 9, 2013) பிபிசி தமிழோசையில்,

பிலிப்பன்ஸை தாக்கிய மாபெரும் சூறாவளியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து அங்கு வாழும் ஒருவரின் செவ்வி;

இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ உருவாக்கப்பட்டவிதமானது அரசியலமைப்புக்கு முரணானது என்று கெளஹாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது குறித்த செய்திகள்;

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்பு செவ்வாய்க்கிரகத்துக்கு மங்கள்யாண் விண்கலம் ஏவியுள்ள நிலையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட் தொடர்பில் அது சந்திக்கும் சவால்கள் குறித்த பெட்டகம்;

Transfat எனப்படும் மனிதர்களுக்கு கேடுபயக்கும் கொழுப்புகளை உணவுப்பொருட்களில் தடை செய்வதற்கு அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்