நவம்பர் 16 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 16, 2013, 05:19 PM

Subscribe

இன்றைய (நவம்பர் 16, 2013) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகத்தன்மை மிக்க விசாரணையை மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்காவிட்டால் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஐக்கிய ராஜ்ஜியம் வலியுறுத்தும் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

டேவிட் கேமரனின் இந்த கோரிக்கையை இலங்கை அமைச்சர்கள் மூன்றுபேர் நிராகரித்திருப்பதுடன், இது தொடர்பில் இலங்கைக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாதென அதிபர் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கைக்கு சென்ற பிரிட்டிஷ் பிரதமரை சந்தித்த இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன், இலங்கையின் வடக்கே பெருமளவு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளதாக தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் கிழக்கிலுள்ள சம்பூர் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது வாழ்விடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று நடத்திய கவனயீர்ப்புப் போராட்டம் குறித்த செய்திகள்

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்