ஜனவரி 4 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 04, 2014, 05:38 PM

Subscribe

இன்றைய (04-01-2014) பிபிசி தமிழோசையில்

இந்தியாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழக தலைவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் இன்று சென்னையில் சந்தித்து பேசியிருப்பது குறித்தும் அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் விரிவான செவ்விகள்;

தமிழ்நாட்டின் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தமிழக அரசின் தலைமைச் செயலக கட்டிடத்தில் தற்போதைய அதிமுக அரசு நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவ நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்கிற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து ஓய்வு பெற்ற மருத்துவத்துறை அதிகாரியின் கருத்து;

இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலம் குறித்த செய்திப்பெட்டகம்;

வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் வங்கதேசபொதுத் தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தேர்தலின் பின்னணி மற்றும் களச்சூழலில் அதன் தாக்கங்கள் பற்றிய பிபிசியின் ஆய்வுக் கண்ணோட்டம்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.