ஜனவரி 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 12, 2014, 05:09 PM

Subscribe

இலங்கை இந்திய மீனவர்களிடையே இம்மாதம் 20 ஆம் தேதி சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள கூட்டம் நடப்பது சாத்தியமில்லை என்று இலங்கை மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசியிடம் தெரிவித்த விஷயங்கள். அவரை டில்லியில் சந்திக்கவுள்ள தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்கள்.

எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசனை கேட்டுக் கொண்டுள்ளது குறித்து மனோ கணேசனின் பேட்டி.

இலங்கையின் தென் பகுதியில் மூன்று தேவாலயங்கள் இன்று தாக்கப்பட்டுள்ளது தொடர்பிலான செய்திகள்.