ஜனவரி 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 30, 2014, 05:40 PM

Subscribe

இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் வட மாகாண சபையின் தீர்மானம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ள விபரங்கள்.

போர் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவை குறித்த கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது தொடர்பில் அதன் பொதுச் செயலர் ஹஸன் அலியின் பேட்டி

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு தொடரலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விபரங்கள்.

பிரிட்டனுக்கு ஆட்களை கடத்தி வந்த இலங்கைத் தமிழர்கள் உட்பட பலருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்திகள்