அமைச்சர் தொண்டமான் ஏன் நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை?: தமிழோசை கேள்வி

Feb 01, 2014, 06:38 PM

Subscribe

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மலையகத் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளூர்ப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அமைச்சர் தொண்டமான் உள்ளிட்ட இதொகா தலைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியமை பற்றி அமைச்சர் தொண்டமானிடம் தமிழோசை வினவியது.

அதன்போதே, அமைச்சர் ஏன் நாடாளுமன்றத்துக்குச் செல்வதில்லை, நாடாளுமன்றத்தில் ஏன் மலையக மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதில்லை என்ற கேள்விகளையும் தமிழோசை எழுப்பியது