பிப்ரவரி 8, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-02-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக ஒருபக்கம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்யும் அதேநேரம், அரசின் இன்னொரு குழுவினர் மக்களை பலவந்தப்படுத்தி மரணச் சான்றிதழ் வழங்கிவருவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருப்பது குறித்து அவரது செவ்வி;
இவரது புகாருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு தலைவரின் பதில்கள்;
இலங்கை கிழக்கு மாகாணத்தில் கால் நடை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதியை விவசாயிகளின் பயிற்செய்கைக்கு வழங்கும் அரசின் முடிவை மீள் பரிசீலனை செய்யும்படி மேன் முறையிட்டு நீதிமன்றம் இலங்கை அரசுக்கு இன்று தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசி தம்முடைய நிர்வாக கட்டமைப்புக்குள் இன்று கொண்டுவந்திருக்கும் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் குறித்த தகவல்கள்;
இன்றைய முடிவின் சாதக பாதகங்கள் குறித்த அலசல்;
இந்திய நடுவணரசு சமீபத்தில் அரிசிக்கு புதிதாக சேவை வரியை விதித்திருப்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சேவை வரியை எதிர்ப்பவர்களில் ஒருவரான தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான கே எஸ் ஜெகதீசனின் செவ்வி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
