மார்ச் 1, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-03-2014) பிபிசி தமிழோசையில்
இந்திய மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக தமிழக விசைப்படகு உரிமையாளர்கள், தற்போது மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையின் வடமாகாணசபைக்கான தலைநகரை மாங்குளத்துக்கு மாற்றவேண்டும் என்று டெலோ கட்சி கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்திகள்;
இந்திய குடியரசுத்தலைவர் மரணதண்டனைக்கைதிகளின் கருணை மனுமீது முடிவெடுக்க காலதாமதம் செய்ததை காரணம் காட்டி பதினைந்துக்கும் அதிகமான மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு இன்று சனிக்கிழமை மேல்முறையீடு செய்திருப்பது குறித்த செய்திகள்;
தென்னிந்திய மாநிலமான ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலங்கானா என்கிற தனிமாநிலமாக உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய குடியரசுத்தலைவர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது குறித்த செய்திகள்;
போரின்போது அண்டைய நாட்டு பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தமைக்காக ஜப்பான் அரசு தான் முன்பு கோரியிருந்த மன்னிப்பு தொடர்பில் மறு ஆய்வு செய்யப்போவதாக அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்
