ஹாலிவுட் மேற்குலகின் கலாசார கருவியா ?

Mar 03, 2014, 05:16 PM

Subscribe

ஹாலிவுட் உலகின் ஆஸ்கர் விருதுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொலைக்காட்சிகள் மூலம் காட்டப்பட்டபோது, வழக்கம் போல, உலகின் பல பகுதிகளில் ஹாலிவுட் ரசிகர்கள் அந்த விழாவைப் பார்த்தனர்.

இது தவிர உலக ஊடங்கங்களிலும் இந்த விருதுகள் பற்றிய செய்திகள் இன்று ஆக்ரமித்துகொண்டிருக்கின்றன.

உலக அளவில் ஆங்கிலம் முதல் மொழியாகப் பேசும் நாடுகளைத் தவிர, பிற நாடுகளிலும், ஹாலிவுட் ஒரு பெரிய வெகுஜன கலாசார சக்தியாக வளர்ந்திருக்கிறதா , அது உள்ளூர் கலாசார வெளியை எந்த அளவுக்கு ஆக்ரமித்திருக்கிறது என்ற கேள்விக்கு விடையளிக்கிறார், இந்திய திரைப்பட விமர்சகர் தியொடர் பாஸ்கரன் .