இன்றைய ( மார்ச் 12) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் வெறுப்புணர்வைக் கக்கும் வகையிலான பேச்சுக்களை தடுக்கும் வகையில் நெறிமுறைகளை உருவாக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பற்றிய செய்தி இந்த உத்தரவு கருத்து சுதந்திரத்தை பாதிக்குமா என்பது குறித்து மனித உரிமை ஆர்வலருடன் ஒரு பேட்டி
இலங்கையில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்களில் 116 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி. இதற்கிடையே இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து நாளை கொழும்பில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
இலங்கை மீன்வளத்துறை தனது மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடிக்கவேண்டாம் என்று எச்சரித்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் யானை வேட்டையாடுபவர்கள் யானைகளைக் கொல்ல இரும்புத்துகள்கள் கலந்த வெடிமருந்தை பயன்படுத்துவது பற்றிய செய்தி
பின்னர் பலகணி
ஆகியவை கேட்கலாம்
