“இலங்கை அரசு மீதான அதிருப்தி அதிகமாகியிருக்கிறது”
Share
Subscribe
இலங்கையில் நடைபெற்று முடிந்த மேல் மாகாணசபை மற்றும் தென் மாகாணசபைக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதிலும் 2009ம் ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலில் பெற்றிருந்த உறுப்பினர்களை விட இம்முறை குறைவான உறுப்பினர்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. தொடர்புடைய விடயங்கள்
இலங்கை மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தனது தற்போதைய ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் அதன் வாக்குவீதமும், மாகாணசபை இடங்களும் குறைந்திருப்பது என்பது இலங்கை அரசு மீதான அதிருப்தி அதிகரித்து வருவதை குறிப்புணர்த்துவதாக கூறுகிறார் தினக்குரல் செய்தியாசிரியர் கேஆர்பி ஹரன்.
