ஏப்ரல் 5 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (05-04-2014) பிபிசி தமிழோசையில்
ஆப்கானிஸ்தானில் ஹமீத் கர்சாய் போட்டியில் இல்லாமல் முதல் முறையாய் நடந்த ஓர் அதிபர் தேர்தலில் இன்று பெருமளவில் மக்கள் வாக்களித்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் பொதுமக்களைக் கைது செய்து அவர்களது கைவிரல் அடையாளங்களை பலவந்தமாகப் பதிவதற்கு இலங்கை காவல்துறையினருக்கு அதிகாரம் கிடையாது என்று இலங்கையின் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போர் காலகட்டத்தின்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியிருப்பதற்கு என்ன பொருள் என்று பாஜக கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;
தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் தமது படைப்புகளை மின்புத்தகங்களாக வெளியிடுவதில் காட்டத் துவங்கியிருக்கும் கூடுதல் ஆர்வம் குறித்த செய்திகள்;
ஒரு நகரில் வாழும் மக்களின் பொது சுகாதாரத்துக்கு அந்த நகரில் இருக்கும் பூங்காக்கள் உள்ளிட்ட பசுமைத்தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸின் தலைவரான மருத்துவர் சர் ரிச்சர்ட் தாம்சன் கூறியுள்ளது குறித்த செய்தி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
