ஏப்ரல் 9 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (09-04-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் சந்தேக நபர்களைத் தேடுதல் என்கிற பெயரில் பெண்கள் தொடர்ந்தும் தொல்லைக்குள்ளாக்கப்படுவதாகவும் பூசா முகாமில் தடுத்து வைக்கப்படுவதாகவும் பெண்களுக்கான அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொது பல சேனா அமைப்பின் பிக்குகள், பௌத்த மற்றும் முஸ்லிம் மத போதகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவல்கள்;
இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டும் 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என, உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மிசோரம் மாநிலம் தவிர மீதம் உள்ள நான்கு வடகிழக்கு மாநிலங்களிலும் இன்று புதன்கிழமை நடைபெற்று முடிந்திருப்பது குறித்த செய்திகள்;
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை பற்றிய செய்தி;
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவின் நீலகிரி தொகுதி நிலவரம் குறித்த செய்திப் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
