ஏப்ரல் 11 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-04-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையில், பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த கோபி என்ற விடுதலைப்புலிகள் இயக்க நபர் என்று கூறப்படுபவர் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது குறித்த செய்திகள்;
இந்த சம்பவம் குறித்தும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாக் இலங்கை அரசு கூறியிருப்பது குறித்தும் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் S. பாலகிருஷ்ணனின் பேட்டி;
இலங்கையில் பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பகுதியான வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதாக அரசாங்கத்திலுள்ள பௌத்த வாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டி வருகின்றது. அதனை, அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் தலைவர்கள் மறுக்கின்றனர். இந்தப் பிரச்சனையில் அரசாங்கம் தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாத படியால், இனங்களுக்கு இடையிலான உறவு மோசமடையும் அபாயம் உள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. இதுபற்றி அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் பேட்டி;
இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்த தீர்மானத்தின் அடுத்த கட்டமாக இந்தியா இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாடு இனி எடுக்கும் என்ற கேள்விக்கு இலங்கைக்கான இந்தியதூதர் அளித்திருக்கும் பேட்டி;
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல்முறையாக, தான் திருமணமானவர் என்பதை ஒப்புக்கொண்டிருப்பது குறித்து அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது குறித்த செய்திகள்;
ஜாதிக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்றான தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் வெற்றி வாய்ப்புகள் குறித்த செய்திப்பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
