முதல் தடவை வாக்களிக்கும் இளைஞர்கள் - பெட்டகம்
Share
Subscribe
தமிழகம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதியன்று தேர்தலை சந்திக்கும் நிலையில், சுமார் 5 கோடியே 5 லட்சம் வாக்காளர்கள் அன்று வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
இவர்களில் கணிசமானவர்கள் முதன் முறை வாக்களிக்கவுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கோடியே 16 லட்சம் வாக்காளர்களே இருந்தனர். இந்த முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றருப்பவர்களில் 18-19 வயதுக்குட்பட்வர்கள் மட்டுமே சுமார் பதினோரு லட்சம் பேர் இருக்கிறார்கள்.
எல்லாக் கட்சிகளுமே இந்த முதன் முறை வாக்காளர்களைக் கவர முயன்றாலும், இவர்கள் எந்த அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள் என்பது இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல முதன் முறை வாக்காளர்களைச் சந்தித்து, அவர்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதில்கள் சுவாரஸ்யமானவை.
அவை குறித்து எமது சென்னைச் செய்தியாளர் முரளிதரன் தயாரித்து வழங்கும் செய்திப்பெட்டகம்.
