ஏப்ரல் 15 - தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
• திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவிக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி,
• கனடா அரசு, இலங்கை காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை காமன்வெல்த் அமைப்புக்கு நிதியை இடை நிறுத்திவைக்கப் போவதாக கூறியிருப்பது பற்றிய செய்தி,
• யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு,
• இலங்கைப் போரின் இறுதிக் கட்டங்களில் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக ஈடுபட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும் என்று கோரி பொது நல வழக்கொன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள்,
• ஜெயலலிதா மீதான வருமான வரிக் கணக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் மேலும் 3 மாத கால அவகாசம் தந்திருப்பது பற்றிய செய்தி
• மற்றும் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
