ஏப்ரல் 19 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 19, 2014, 05:17 PM

Subscribe

இன்றைய (19-04-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் 64 வயதுடைய பெண் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கை கடற்படைக்காக பெருமளவு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் காணிகளை இழந்த முஸ்லிம் குடும்பங்களே வில்பத்து சரணாலய பகுதியில் குடியேற்றப்படுவதாக கூறப்படுவதை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்திருப்பது குறித்து இந்த மீள்குடியேற்ற விவகாரங்களுடன் தொடர்புடையவராக பார்க்கப்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் செவ்வி;

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத பிரச்சனை என்பது அதிகரித்துவருவதாக இலங்கையின் மத்திய வங்கியே கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் 2011 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பல லட்சம் கோடிகள் பெருமானமுள்ளதாக கருதப்படும் தங்கப்புதையலின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியதாக மாறியிருப்பதாக இந்த புதையலின் மதிப்பு குறித்து விசாரணை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த குழு அச்சம் வெளியிட்டுள்ளது குறித்த செய்தி;

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இந்தியர்கள் சிலர் தமது உடல் உறுப்புகளை விற்க விளம்பரம் செய்யும்போக்கு குறித்த பெட்டகம்

நைஜீரியாவில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப் படுபவர்களால் கடத்திச்செல்லப்பட்டிருந்த பதின்ம வயதுப் யுவதிகளின் எண்ணிக்கை தொடர்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவது குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்