ஏப்ரல் 23 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (23-04-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபல சேனா அமைப்பினர் மாற்றுக் கருத்துடைய ஒரு புத்தபிக்குவை அங்கு தேடியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டு காவல்துறையினர் தலையிடும் நிலைக்கு சென்றது குறித்த செய்திகள்;
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் இஸ்லாமியரின் புனித குரானுக்கு அவமதிப்பு ஏற்படக்கூடிய வகையில் செயற்பட்டதாக கூறப்படும் புகாரை விசாரிக்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது குறித்த செய்திகள்;
இந்தியாவில் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் தருவதை நெறிப்படுத்துவது குறித்து பரிந்துரைக்க நான்கு பேர் கொண்ட குழுவை இந்திய உச்சநீதிமன்றம் நியமித்திருப்பது குறித்து ஹிந்து பத்திரிக்கை குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான என் ராமின் செவ்வி;
இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக்கூறி பாஜக முன்னாள் அமைச்சரும் மக்களவை வேட்பாளருமான கிரிராஜ் சிங்கைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது குறித்த செய்தி;
நிறைவாக பலகணியில் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடானா கிர்கிஸ்தானில் பெண்களைக் கடத்திச்சென்று திருமணம் செய்யும் வழக்கம் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
