ஏப்ரல் 30 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (30-04-2014) பிபிசி தமிழோசையில்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சேர்ந்தவர் என்கிற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையர் என்று கருதப்படும் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதி காவல் துறை நரேந்திர மோடி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது குறித்த செய்திகள்;
இரண்டுநாட்கள் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு ஆனந்தசங்கரி அழைக்கப்படாதது ஏன் என்பதற்கு கூட்டமைப்பின் பதில்;
இலங்கையின் தொழிற்சங்க ஒன்றியம் நாளை கொழும்பு ஹைட் மைதானத்தில் மே தினகூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்த செய்தி;
அமெரிக்காவில் விஷ மருந்து கொடுத்து மரண தண்டனையை நிறைவேற்ற எடுத்த முயற்சி தவறான மருந்தால் தோல்வியடைந்து குறிப்பிட்ட கைதி வலியால் துடிதுடித்து, பின்னர் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது குறித்த செய்திகள்;
இன்றைய பலகணியில், இந்திய நாடாளுமன்றத்தேர்தல் குறித்து இலங்கையின் வடபகுதித் தமிழர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை கேட்கலாம்.
