மே 3 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 03, 2014, 05:00 PM

Subscribe

இன்றைய (03-05-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் தனியொரு மத அடையாளத்தை மையப்படுத்தி-போலியாக தேசிய ஒற்றுமை என்கின்ற கருத்தை ஊக்குவித்துவரும் மத கடும்போக்குவாதிகளால் குழப்பங்களும் பல்வேறு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளும் நடந்துவருவதாக இலங்கையிலிருந்து வத்திக்கான் சென்றுள்ள கத்தோலிக்க ஆயர்மாரிடம் பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வெளியிட்டிருப்பது குறித்து வத்திக்கானில் தற்போது இருக்கும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்புச்செவ்வி;

இலங்கையில் அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 4 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

தமிழக தலைநகர் சென்னை குண்டுவெடிப்பு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் திமுக தலைவர் மு கருணாநிதிக்கும் இடையிலான அறிக்கைப்போர் தீவிரமடைந்திருப்பது குறித்த செய்திகள்;

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் அவை ஆதாரமற்றது என்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மே மாதம் 3 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இன்று ஊடக சுந்தந்திர தினத்தை ஒட்டி ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தவோ அல்லது அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவோ பாகிஸ்தானிய அரசாங்கம் முற்றாக தவறிவிட்டது என்று அம்னஷ்டி கூறியிருப்பது குறித்த செய்திப்பெட்டகம்;

உலக மட்டத்தில் பாலியல் ஆசை காட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பலை பிலிப்பைன்ஸ் போலிஸார் கைது செய்திருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.