மே 28 - தமிழோசை நிகழ்ச்சிகள்

May 28, 2014, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,

• இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க பரிசீலனை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் மோடியின் அலுவலக துணை அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது பற்றிய கருத்து, • மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பது பற்றி ஐநா மன்ற அகதிகள் நிறுவனம் கண்டித்திருப்பது பற்றிய செய்தி, • கிளிநொச்சியில் பொதுமக்கள் நிலங்களை ராணுவம் ஆக்ரமித்திருப்பதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி, • சரத் பொன்சேகாவுக்கு போர் வெற்றிக்கு பரிசாக தரப்பட்ட அரச நிலத்தை அரசே மீண்டும் கையகப்படுத்த முயல்வதற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு பற்றிய விவரங்கள், • பலகணியில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் உள்ளூர் ஆசியர்கள் இல்லாத நிலை குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.