ஜூன் 11 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 11, 2014, 05:00 PM

Subscribe

இன்றைய (11-06-2016) பிபிசி தமிழோசையில்

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை கைப்பற்றியிருக்கும் இசிஸ் தீவிரவாத அமைப்பின் பின்னணி குறித்த பிபிசியின் திறனாய்வுக்கண்ணோட்டம்;

போர் மற்றும் மோதல் பகுதிகளில் பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்த புதிய சர்வதேச உடன்பாடுகளைக் காணும் நோக்கில், லண்டனில் நேற்று தொடங்கி நடந்து வரும் 4 நாள் மாநாட்டையொட்டி பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், தெரிவித்த சில கருத்துக்களில் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி, பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் திரும்ப இலங்கைக்கே அனுப்ப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆராய்வார் என்று கூறியிருப்பது குறித்த செய்திக்குறிப்பு;

பிரிட்டனில் அகதித் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், போர் முடிந்தபிறகும் இலங்கையில் தாம் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக பிபிசிக்கு அளித்த செவ்வி மற்றும் அவரது இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை ராணுவம் தெரிவித்திருக்கும் மறுப்பு;

இந்தியாவின் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய மத்திய துணை அமைச்சருமான வி.கே.சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது குறித்த செய்தி;

தமிழ்நாட்டில் இன்று துவங்கப்பட்டிருக்கும் “அம்மா” உப்பு விற்பனை சாதாரண உப்பு உற்பத்தியாளர்களின் வியாபாரத்தை சரிபாதியாக குறைத்துவிடும் என்று கூறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுதொழில் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் பீட்டர் ஜெபராஜின் செவ்வி;

இன்றைய பலகணியில் சாக்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் கொக்கோ தோட்டங்களில் சிறார் தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைக்கு அமர்த்தப்படும் அவலம் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.