ஜூன் 12 - இன்றைய தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
• இராக்கில் ஐஸிஸ் அமைப்பு தொடர்ந்து பெரிய அளவில் அரசுக்கெதிரான தாக்குதலில் இடங்களைப் பிடித்து வருவது பற்றிய செய்தி,
• வட இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து தகவல்கள் வந்துகொண்டிருக்கையில், தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் பத்து வயது சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி,
• தலித் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று கூறி, அந்தச் சட்டத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு பற்றிய இரு தரப்பு கருத்துக்கள்,
• உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கடந்த காலத்தில் நடைபெற்ற ஒன்பது உலகக் கோப்பை போட்டிகளை நேரில் பார்த்த வங்கத் தம்பதிக்கு, இந்த முறை பிரேசில் வந்து போட்டிகளைக் கண்டு களிக்க சர்வதேச கால்பந்து நிறுவனமே இலவசமாக ஏற்பாடுகளை செய்திருப்பது பற்றிய ஒரு செய்திக் குறிப்பு ஆகியவை கேட்கலாம்.
