ஜூன் 21 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 21, 2014, 06:21 PM

Subscribe

இன்றைய (21-06-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே பாணந்துறை என்ற இடத்தில் இருக்கும் பிரபல ஆடை விற்பனை நிலையமான, நோ லிமிட் என்ற நிறுவனத்தின் கிளை இன்று அதிகாலை தீக்கிரையானது குறித்த செய்திகள்;

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் உள்ள காமல் பள்ளிவாசல் கண்ணாடிகளை அடையாளம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் அலுத்கம உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலங்கையில் தொடரும் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லீம் அமைச்சர்களை சந்தித்தது குறித்த செவ்வி;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம். இலங்கையின் தெற்கே அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை இலங்கையின் தேசிய ஊடகங்கள் கையாண்ட விதம் குறித்த விமர்சனங்கள் சரியா தவறா என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இந்த ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு பெற்றிருக்கும் இந்தியாவில் பிறந்து, மெக்ஸிகோ குடியுரிமை பெற்றுள்ள டாக்டர் சஞ்சய ராஜாராம் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.