ஜெனிவாவில் ஐநா முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
Share
Subscribe
இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், வன்செயலுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டம் குறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவரான ஹனிஃப் முஹமட் அவர்களின் செவ்வியை இங்கு கேட்கலாம்.
