ஜூன் 28 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 28, 2014, 05:25 PM

Subscribe

இன்றைய (28-06-2014) பிபிசி தமிழோசையில்

சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கியிருக்கலாம் என்கிற அச்சங்கள் தொடர்பான செய்திகள்;

ஆஸ்திரேலிய கடலில் கடந்த இரண்டு நாட்களாக தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவிலிருந்து புறப்பட்டதாக கூறப்படும் படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் கிறிஸ்மஸ் தீவை நெருங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சற்றுமுன்னர் வெளியாகியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களை கண்டித்து ஜெனிவாவிலுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் இன்று நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள்;

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெருங்கோடீஸ்வர்ர்களின் எண்ணிக்கை, அதாவது 100 கோடிக்கு மேல் சொத்துடையவர்களின் எண்ணிக்கை இருமடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறித்த பெட்டகம்

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.