சென்னை கட்டிட விபத்துக்கான காரணம் என்ன?
Share
Subscribe
சென்னையின் புறநகர்ப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பலர் பலியாகியுள்ளது ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்கப்பட்டாலும், அவர்களது உரிமைகள் எந்த அளவுக்கு பேணப்பட்டன, வேலை செய்யும்போது போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா, உடல் நலன் சார்ந்த விஷயங்கள் முறையாக கையாளப்பட்டதா, சட்டங்கள் மதித்து நடக்கப்பட்டதா என்பது போன்ற பல கேள்விகளை செயல்பாட்டாளர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்தியாவில் கட்டிடத் தொழிலாளர்களின் நலன்களைக் காக்க இரண்டு முக்கியச் சட்டங்கள் இருந்தாலும், அவை பின்பற்றப்படாததே இந்த விபத்துக்கு ஒரு முக்கியக் காரணம் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தேசியக் கட்டிடத் தொழிலாளர் கூட்டமைப்பின் கூடுதல் பொதுச் செயலர் ஆர் கீதா.
அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது, அதை கண்காணிக்க போதிய அதிகாரிகள் இல்லாததும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என அவர் கூறுகிறார்.
கட்டிடத் தொழிலாளர் நல வாரியத்தில் போதிய அளவுக்கு நிதி இருந்தாலும், அத்தொழிலில் பணியாற்றுபவர்கள் அதில் பதிவு செய்து கொள்ளாததும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன எனவும் கீதா கூறினார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியை இங்கே கேட்கலாம்.
