ஜூலை 9 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (09-07-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையிலிருந்து மக்கள் சட்டவிரோதப் படகுப் பயணங்கள் மூலமாக ஆஸ்திரேலியா வருவதை கண்காணித்து தடுப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இரண்டு ரோந்துப்படகுகளை இலங்கை கடற்படைக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;
ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்துள்ள நிலையில், "இப்படியெல்லாம் மிரட்டி" ஆஸ்திரேலிய தஞ்சக் கோரிக்கை கொள்கைகளை மாற்றிவிட முடியாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் போரில் ஊனமுற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் கோரி சுமார் 300 ஊனமுற்ற படையினர் தாக்கல் செய்த முறையீடு குறித்த தனது பதிலை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் மேலும் கால அவகாசம் அளித்திருப்பது பற்றிய செய்திகள்;
சட்டவிரோத கொலைக்குற்றச்சாட்டு உள்ளிட்ட பெரும் சர்ச்சைகளில் சிக்கிய அமித்ஷா இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சரியான முன்னுதாரணமா என்று பாஜகவின் தமிழ்மாநில பொதுசெயலாளர்களில் ஒருவரான வானதி ஸ்ரீநிவாசனின் பேட்டி
இந்தியாவில் மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் ஆயுள் தண்டனையை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா மத்திய அரசுக்கு உள்ளதா என்பது குறித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் ஜூலை 18ம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் கோரியுள்ளது குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட டெனிசன் என்பவை மீட்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கோரி, அவரது குடும்பத்தாரும், புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் நலச்சங்கமும் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை இன்று சென்னையில் சந்தித்துள்ளது குறித்து அந்தச் சங்கத்தின் உறுப்பினரான வெர்ஜில் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
நிறைவாக இன்றைய பலகணியில் இந்தியாவில் தங்கத்திற்கு நிலவும் கிராக்கி காரணமாக தெற்காசிய பிராந்தியத்தில் நிலவும் தங்கக்கடத்தல் பற்றிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
