ஜூலை 11 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-07-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பொய்பிரச்சாரத்தை கண்டிப்பதாக இலங்கை அரசின் ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கை விடுத்திருப்பது குறித்து இலங்கையின் மூத்த முஸ்லீம் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியின் செவ்வி;
தற்போது இலங்கை வடமாகாண ஆளுநராக இருக்கும் சர்ச்சைக்குரிய முன்னாள் ராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரஸ்ரீயின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, த தே கூவின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவின் செவ்வி;
இந்தியா வந்திருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசியது குறித்த விரிவான செய்திகள்;
இலங்கையில் விற்கப்படும் சிகரெட் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கை படங்களை பிரசுரிக்கும்படி இலங்கை அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருப்பது குறித்த செய்திகள்;
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் தற்போது பத்தாவது இடத்துக்கு முன்னேறி வந்திருக்கும் இந்தியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கொத்தடிமைபோல் நடத்தப்படும் சூழல் நிலவுவதை, பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் குரல்கள் மூலம் படம்பிடித்துக் காட்டும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
