ஜூலை 18 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-07-2014) பிபிசி தமிழோசையில்
மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட செயல் ஒரு சர்வதேசக் குற்றம் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தி ஹேக் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் யுக்ரெய்னிய பிரதமர் கோரியுள்ளது குறித்த செய்திகள்;
இந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்பட முடியுமா என்பது குறித்து இந்தியாவின் மூத்த பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகளில் ஒருவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்தவருமான பொன்ராஜிடம் ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;
யுக்ரெய்ன் நாட்டின் வான் பகுதியில் இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமானங்களை இயக்க வேண்டாம் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
இந்திய அரசின் உயர்பதவிகளான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதல்கட்ட தேர்வுகளில் ஆங்கிலவழி தேர்வுக்கு வட இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறித்த செய்தி;
இந்த ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வில் ஆங்கிலத்தை வடமாநிலத்தவர் எதிர்ப்பது ஏன் என்று ஐ ஏ எஸ் தேர்வில் ஆங்கிலத்தை வடமாநிலத்தவர் எதிர்ப்பது ஏன் என்பது குறித்து ஐ ஏ எஸ் தேர்வுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் ஐ ஏ எஸ் அகாதமியைச் சேர்ந்த ராமசாமியின் செவ்வி;
ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி சென்று அந்நாட்டு கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேரையும் இலங்கைக்கு திருப்பியனுப்பும் உடனடித் திட்டம் இல்லையென ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
யாழ் மாவட்டத்தில் 11 வயது பாடசாலைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பான புகாரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
பிரிட்டிஷ் பிரஜை குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை அளித்துள்ளது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
