ஜூலை 19 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 19, 2014, 06:32 PM

Subscribe

இன்றைய (19-07-2014) பிபிசி தமிழோசையில்

மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருக்கும் தடயங்களை ரஷ்ய ஆதரவு யுக்ரேனிய கிளர்ச்சியாளர்கள் அழிப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்த செய்திகள்;

இலங்கை ஜனாதிபதி மற்றும் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி குறித்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்த செய்திகள்;

இலங்கையில் சுமார் 2500 சிறார் துஷ்பிரயோகம் செய்யக்கூடியவர்களை அடையாளம் கண்டிருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் கிழக்கில் வேகமாக காணாமல் போய்க்கொண்டிருக்கும் நீர்ப்பாசன குளங்கள் குறித்த கவலைகள் அதிகரித்தபடி இருப்பது குறித்த செய்திகள்;

தமிழகத்தில் அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்த செய்திகள்;

பெங்களூரில் 6 வயது சிறுமி பள்ளி ஊழியர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியும் அந்த தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தியிருப்பது குறித்த செய்திகள்;

நான்கு இறக்கைகளைக் கொண்டிருந்த அபூர்வ டைனோசார் ஒன்று சைனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.