ஜூலை 25 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-07-2014) பிபிசி தமிழோசையில்
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரிச்சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் 157 இலங்கை தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா அரசு தீர்மானித்துள்ளது குறித்த செய்திகள்;
ஆஸ்திரேலிய அரசின் இன்றைய இந்த முடிவு குறித்து, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த பால விக்னேஸ்வரனின் பிரத்யேக செவ்வி;
இலங்கையில் நடக்கும் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் கொலைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் பெண்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் குறித்த செய்திகள்;
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறித்த செய்திகள்;
இந்தியாவில் இடம்பெயர்ந்து கொத்தடிமைகளாக இருப்பவர்கள் தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிடம் விளக்கம் கேட்டிருப்பது குறித்த செய்திகள்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்த செய்திகள்;
அடுத்து கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளின் இன்றைய நேரடித் தகவல்கள் ஆகியவற்றை கேட்கலாம்.
