'ஆஸ்திரேலிய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது ஆனால் விசித்திரமானது'
Share
Subscribe
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதப் படகுப் பயணம் மேற்கொண்டு தஞ்சம் கோர முயன்ற 157 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய அரசு கடலில் தடுத்து வைத்திருந்தது. அவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் அணுக அனுமதிக்கவேண்டும் என்று இந்திய அரசு கோரியதை அடுத்து, அவர்களை ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்குக் கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்தது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு குறித்து , ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்த கருத்துக்கள்
