ஆகஸ்ட் 2, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 02, 2014, 05:23 PM

Subscribe

இன்றைய (02-08-2014) பிபிசி தமிழோசையில்

கடலில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த 157 தமிழர்களும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க மறுத்துவிட்ட நிலையில் அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது குறித்த செய்திகள்;

இந்த 157 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க மறுக்கும் முடிவை தாமாக எடுத்தார்களா அல்லது சட்டவல்லுநர்களின் உதவி அல்லது ஆலோசனைகளை பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா என்று ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரனின் செவ்வி;

கச்சத்தீவு செல்வதாக இருந்த தமிழக மீனவர்களின் போராட்டம் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனின் உறுதிமொழியை தொடர்ந்து இன்று விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவில் ஐந்தாவது இடத்திலுள்ள இந்தியா இதுவரை 14 தங்கம் அடங்கலாக 55 பதக்கங்களை வென்றுள்ளது குறித்த விரிவான செய்திகள்;

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்