சீமானை கேள்வி கேட்டதால் தாக்கப்பட்டோம்: மாணவர் அமைப்பு காசுக்காக அனுதாபம் தேடுகிறார்கள்: புலிப்பார்வை இயக்குநர்

Aug 16, 2014, 05:55 PM

Subscribe

இலங்கை இறுதிப்போரின் நிகழ்வுகளை களமாக வைத்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் “புலிப்பார்வை” திரைப்படத்தின் இசைக்கோவை வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடந்தபோது அங்கு சென்றிருந்த ஈழ ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானிடம் தாங்கள் சில கேள்விகளை எழுப்ப முயன்றதாகவும் ஆனால் அதை பொறுக்காத சீமானின் ஆதரவாளர்கள் தங்களை சரமாறியாக தாக்கியதாகவும் கூறுகிறார் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாற்றம் என்கிற மாணவர் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப்.

ஈழ ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப்பின் இந்த குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுக்கிறார் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த புலிப்பார்வை திரைப்பட்த்தின் இயக்குநர் பிரவீன் காந்தி. இந்த மாணவர்கள் பணத்துக்காக தம் மீது பரிதாபம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே தாங்கள் தாக்கப்பட்டதாக கூறுவதாக குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி, அந்த மாணவர்கள் அசிங்கமாக நடந்துகொண்டதாகவும், எனவே அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்களே தவிர தாக்கப்படவில்லை என்று கூறினார்.

இருதரப்பாரின் கருத்துக்களையும் இந்த ஒலிக்கோவையில் முழுமையாக கேட்கலாம்