தமிழக மீன்பிடி படகுகள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவையல்ல: தமிழக மீனவர் பிரதிநிதி
Share
Subscribe
இந்திய இலங்கை கடல் எல்லைமீறிச்சென்று இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்து பிடிபடும் தமிழக மீன்பிடி படகுகள் தமிழ்நாட்டின் அரசியல் பெரும்புள்ளிகளுக்குச் சொந்தமானவை என்கிற குற்றச்சாட்டு பொய்யான தகவல் என்கிறார் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் ராமேஸ்வர மாவட்ட செயலாளர் பி சேசுராஜன்.
ராமேஸ்வரத்தில் மட்டும் இப்படி மீன்பிடிக்கச் செல்லும் சுமார் 800 மீன்பிடி படகுகளில் 700 படகுகளில் அவற்றின் உரிமையாளர்களே மீன்பிடிக்கச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
