தீபிகா படுகோனே உடைகுறித்து விமர்சிக்க ஊடகங்களுக்கு தகுதியில்லை: குஷ்பு

Sep 15, 2014, 01:48 PM

Subscribe

பிரபல இந்திய நடிகை தீபிகா படுகோனே தனது கவர்ச்சியான தோற்றத்தை அளவுக்கு அதிகமாக வெளிகாட்டும் விதமான புகைப்படத்தை வெளியிட்டு அதை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இந்திய தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியையும் அதை வெளியிட்ட செய்தித்தாளையும் தீபிகா படுகோனே கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் நடிகை குஷ்பு, தீபிகா படுகோனே உடைகுறித்தோ அவர் உடை உடுத்திய விதம் குறித்தோ கேள்வி எழுப்ப ஊடகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்.

இது குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகை குஷ்பு தீபிகா படுகோனே உடையணிந்த விதம் குறித்து விவாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் ஆட்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். குஷ்புவின் பேட்டியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.